புதுதில்லி: போலி செய்தி வெளியிட்டால் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று திங்களன்று வெளியான மத்திய செய்தி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய செய்தி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் சார்பாக திங்களன்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி போலி செய்திகளை உருவாக்கி வெளியிடும் மற்றும் பரப்பும் செய்தியாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இவ்வாறு ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி முதலில் ஊடக ஒழுங்குமுறை அமைப்புகளான 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' மற்றும் 'நேஷனல் ப்ராட்கேஸ்ட்டர் அசோசியேஷன்' ஆகிய அமைப்புகளுக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்தப் புகாரின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் வரை சம்மந்தப்பட்ட பத்திரிகையாளரின் அங்கீகாரம் தாற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
பின்னர் அவர்கள் மீதான தவறு உறுதி செய்யப்பட்டால் முதல்முறை என்றால் அவர்களது அங்கீகாரம் ஆறு மாதங்களும், இரண்டாவது முறை என்றால் ஒரு வருடமும் ரத்து செய்யப்படும். அதற்கே மேலே என்றால் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி தரப்பில் இந்த அறிவிப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திங்களன்று வெளியான மத்திய செய்தி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் அறிவிப்பானது திரும்பப் பெற்றுக் கொள்வதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி செய்தி தொடர்பான விவகாரங்களில் 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' முடிவெடுப்பதே சரியாக இருக்குமென்றும் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



