கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம்: காங்கிரஸார் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் காங்கிரஸார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் நிருபம் தலைமையில்

News image

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வியாழக்கிழமை சைக்கிள் பேரணி சென்ற காங்கிரஸார்.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:03 am IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் காங்கிரஸார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் நிருபம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, பேரணியைத் தொடங்கி வைத்து சஞ்சய் நிருபம் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெய்யின் விலை 120 டாலர்களாக இருந்தது. அந்த காலகட்டத்திலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70-க்குத்தான் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை 60 டாலர்களாகக் குறைந்துள்ளது. ஆனால், ரூ.75-க்கும் அதிகமாக பெட்ரோல் விலை இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எரிபொருள் மீது கூடுதல் வரி விதிப்பதுதான் அதற்குக் காரணம்.
மும்பை, தாணே நகரங்களில் மட்டும் பெட்ரோலியப் பொருள்களுக்கு 40 சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரியை மாநில அரசு விதித்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூடுதல் வரியை குறைக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அதன் மீதான வரிவிதிப்புகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படும். இல்லையெனில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதிகரித்தாலும் மக்களுக்கு பாதிப்புதான் மிஞ்சும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.