அருணாசலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக தங்கள் நாடு ஒருபோதும் அங்கீகரித்ததில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங்கிடம், அருணாசலப் பிரதேச எல்லையில் உள்ள அஸபிலியா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
அந்தச் சம்பவம் குறித்து எனக்கு தகவல் எதுவும் தெரியாது. இந்தியா-சீனா இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னை குறித்த விவகாரத்தில், பிரச்னையை பெரிதுபடுத்தாமல், இருநாடுகளும் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை கடைப்பிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எல்லைப் பகுதியில் அமைதி தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியா-சீனா இடையேயான எல்லை குறித்த விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய நிலைப்பாட்டில், சீனா தெளிவாக உள்ளது. அருணாசலப் பிரதேசம் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியை சீனா அங்கீகரிக்கவில்லை.
எல்லைத் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்த வேண்டும். இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில், நேர்மையான தீர்வை எட்ட வேண்டும் என்றார் கெங் சுவாங்.
தில்லிக்கு அண்மையில் சீன வெளியுறவுத் துறை இணையமைச்சர் சுற்றுப்பயணம் சென்றது குறித்தும், இந்திய அமைச்சர்கள் தொடர்ந்து சீனாவுக்கு சுற்றுப்பயணமாக வருவது குறித்தும் சுவாங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'சீனா-இந்தியா இடையே நல்ல ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றங்கள் உள்ளன; இத்தகைய ஒத்துழைப்பு நிலவுவது ஒன்றும் வித்தியாசமில்லை' என்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்களின் மாநாடு, சீனாவின் குவிங்டோ நகரில் ஜூன் மாதம் நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் மாதம் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

