/

காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு உறுப்பினராக அசோக் கெலாட் நியமனம்

தேர்தல்களின்போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் கொண்ட அக்கட்சியின் உயர் அமைப்பான மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராக அசோக் கெலாட்

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 8:48 pm

தேர்தல்களின்போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் கொண்ட அக்கட்சியின் உயர் அமைப்பான மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராக அசோக் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரான அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைப்புரீதியிலான பயிற்சிகளை வழங்கும் பொறுப்புடன் கூடிய பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராகுல் தலைமையிலான கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்வதற்காக, கட்சியின் மத்திய தேர்தல் குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.