சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) பயணித்த பேருந்தை குறிவைத்து நக்ஸஸ் தீவிரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் இருவர் பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
பிஜப்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை வருகை தரவிருப்பதை முன்னிட்டு, அங்கு சிஆர்பிஎஃப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்மா கிராமம் அருகே திங்கள்கிழமை ரோந்துப் பணிக்காக 30 சிஆர்பிஎஃப் வீரர்களுடன் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தை குறிவைத்து, நக்ஸல் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பிஜப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல், பிஜப்பூர் மாவட்டத்தின் பிஜப்பூர் - போபால்பட்னம் இடையிலான சாலையில் சிஆர்பிஎஃப் படையின் மற்றொரு குழுவினரை குறிவைத்து, நக்ஸல் தீவிரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். இரு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதுடன், வீரர்களை நோக்கி நக்ஸல்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் நக்ஸல்களுக்கு பதிலடி கொடுத்தனர். பின்னர் நக்ஸல்கள் தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
மேற்கு வங்கம்: மழையிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

