மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஸ்வாஸிலாந்தில் ராம்நாத் கோவிந்த்

மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்வாஸிலாந்துக்கு திங்கள்கிழமை சென்றார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 8:48 pm

மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்வாஸிலாந்துக்கு திங்கள்கிழமை சென்றார்.
ஆப்பிரிக்க நாடுகளான ஈக்குவடோரியல் கினியா, ஸ்வாஸிலாந்து, ஜாம்பியா ஆகிய 3 நாடுகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 7-ஆம் தேதி சுற்றுப் பயணம் தொடங்கினார். ஈக்குவடோரியல் கினியாவில் சுற்றுப் பயணத்தை முடித்த அவர், ஸ்வாஸிலாந்துக்கு திங்கள்கிழமை சென்றார். ராம்நாத் கோவிந்துடன் அவரது மனைவி சவிதா கோவிந்தும் சென்றுள்ளார். இருவருக்கும் ஸ்வாஸிலாந்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்பயணத்தின்போது, அந்நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வதியை ராம்நாத் சந்தித்துப் பேசவுள்ளார். ஸ்வாஸிலாந்து பயணத்தைத் தொடர்ந்து, ஜாம்பியாவுக்கு ராம்நாத் செல்லவிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.