தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தலித், பழங்குடியினர்களின் உரிமைகளை பாஜக நசுக்குகிறது: காங்கிரஸ் தலைவர் ராகுல்

மத்திய பாஜக அரசு, தலித் மற்றும பழங்குடியினர்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் திங்கள்கிழமை விமரிசித்துள்ளார். 

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 3:01 pm

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். தில்லியில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமை வகித்தார். 

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, காவிரி விவகாரம், ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:

நாடு முழுவதும் பாஜக பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் எப்போதுமே தலித் மற்றும் பழங்குடியினவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். தலித் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை மத்திய அரசு நசுக்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மட்டும் தான் போராடி வருகிறது. வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் மகத்தான ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.