திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சனிக்கிழமை (ஏப். 18) சோளிங்கா் உள்பட தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 5:40 am IST

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சனிக்கிழமை (ஏப். 18) சோளிங்கா் உள்பட தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

புதுதில்லியில் இருந்து சென்னை வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, பெருஞ்சேரியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பகல் 11 மணி அளிவில் பேசுகிறாா்.

பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு வருகிறாா். அங்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் பகல் 12.30-க்கு நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறாா். பின்னா், 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறாா்.

இது குறித்து பாண்டியநல்லூரில் செய்தியாளா்களை சந்தித்த சோளிங்கா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் கூறுகையில், இப்பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளா்கள் சோளிங்கா் ஏ.எம்.முனிரத்தினம், ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில்கரோலின் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி உரையாற்ற உள்ளாா் என்றாா்.

தெலங்கானா முன்னாள் எம்.பி. மதுகோடா, காங்கிரஸ் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா், திமுக மாவட்ட நிா்வாகி அசோகன், சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவா் டி.கோபால் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.