மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

எரிசக்தி துறையில் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2018, 11:01 am

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

16-ஆவது சர்வதேச எரிசக்தி கருத்தரங்க கூட்டம் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதனை இந்திய அரசு கடந்த 1996-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது நடத்துகிறது. சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் துணை நின்றன. 

இந்த கூட்டத்தில் மொத்தம் 92 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவற்றில் 72 நாடுகள் சர்வதேச எரிசக்தி கருத்தரங்கத்தில் அங்கம் வகிப்பவை. மீதமுள்ள 20 நாடுகள் இந்த கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொள்ள விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளன.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச அளவிலான எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவில் தயாரிப்பு (மேக் இன் இந்தியா) திட்டத்தின் அடிப்படையில் ஜவுளி, பெட்ரோ கெமிக்கல் மற்றும் பொறியியல் துறைகளின் தொழிற்சாலைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு அனைத்து விதங்களிலும் ஊக்கமளித்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி துறையில் எனது எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் எரிசக்தியில் எளிய அணுகுமுறை, எரிசக்தி ஆற்றல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தியின் நீண்டகால தாக்குபிடிப்புத் தன்மை உள்ளிட்டவைகளை இதன் நான்கு தூண்களாக கருதுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.