மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

லாலு பிரசாத் குடும்பத்தின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இல்லை: பிகார் ஏடிஜிபி விளக்கம்

லாலு பிரசாத் குடும்பத்தின் பாதுகாப்பு முன்பு போன்று தொடர்வதாக பிகார் மாநில ஏடிஜிபி விளக்கமளித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2018, 1:17 pm

பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு அளித்து வந்த பாதுகாப்பு படையினர் திரும்பப்பெறப்பட்டதாக லாலு மனைவி ராப்ரி தேவி குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எங்கள் வீட்டுக்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி பிகார் அரசு அவசரமாக திரும்பப்பெற்றுள்ளது. எங்கள் குடும்பத்துக்கு ஏதாவது நடந்தால் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தான் முழுப் பொறுப்பு. இது பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் மோடி ஆகியோரது அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பிகார் மாநில ஏடிஜிபி எஸ்.கே.சிங்கல் கூறுகையில்,

லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கும் அவரது வீட்டுக்கும் வழக்கம் போல் பாதுகாப்பு பணிகள் தொடர்கின்றன. இதில் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதீப் யாதவ் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தவில்லை. அவர்களது பாதுகாப்பு வீரர்கள் அதேபோன்று தொடர்கின்றனர். இதில் ஒருவர் கூட திரும்பப்பெறப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை. எனவே இவ்விகாரம் தொடர்பாக யாரும் எந்த குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.