/

பள்ளி, கல்லூரிகளைப் போல வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் வருகிறது ஆடைக் கட்டுப்பாடு

வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு முறை கொண்டு வரப்படுவதாக வருமான வரித்துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 4:06 pm IST


புது தில்லி: வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு முறை கொண்டு வரப்படுவதாக வருமான வரித்துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வருமான வரித்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும், ஒழுக்கமான, கண்ணியமான ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு பணிக்கு வர வேண்டும். நாகரீகமற்ற, விருந்து, கேளிக்கைக்கு செல்வது போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு அலுவலகத்துக்கு கண்டிப்பாக வரக்கூடாது.

இந்த உத்தரவு மத்திய நேரடி வரி விதிப்புத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும். பணியாற்றும் இடத்துக்கு இருக்கும் கண்ணியம் மற்றும் மாண்பை காக்கும் வகையில் பணியாளர்கள் உடையணிந்து வர வேண்டும். இதனை செய்யத் தவறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்குறிப்பிட்ட வகையில் ஆடை அணிந்து வராத ஊழியர்கள் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், வீட்டுக்குச் சென்று மாற்று உடை அணிந்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.