மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

'மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் இருந்தது': திரிபுரா முதல்வரின் ஆச்சர்ய கண்டுபிடிப்பு! 

மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் பயன்பாட்டில் இருந்தது என்று திரிபுரா முதல்வர் விப்லப் குமார் தேவ்  நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள விஷயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published On :

அகர்தலா: மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் பயன்பாட்டில் இருந்தது என்று திரிபுரா முதல்வர் விப்லப் குமார் தேவ்  நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள விஷயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி - மக்கள்  முன்னணியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்வராக பாஜகவைச் சேர்ந்த விப்லப் குமார் தேவ்  பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் பயன்பாட்டில் இருந்தது என்று திரிபுரா முதல்வர் விப்லப் குமார் தேவ்  நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள விஷயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாநில தலைநகர் அகர்தலாவில் பொது விநியோகத் துறையை முழுவதும் கணினிமயமாக்குதல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கினை  அவர் புதனன்று துவக்கி வைத்தார். அப்பொழுதுஅவர் பேசியதாவது:

இண்டர்நெட் மற்றும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகிய இரண்டும் லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன்னால் மகாபாரத காலத்திலேயே பயன்பாட்டில் இருந்துள்ளது. இல்லை என்றால் மகாபாரதத்தில் மன்னன் திருதிராஷ்ட்ரனுக்கு, குருஷேத்திர போர்க்கள காட்சிகளை தேரோட்டியான சஞ்சயன் எவ்வாறு நேரடியாக காண்பித்திருக்க முடியும்?

அதற்கான கருவிகள் அப்பொழுது இருந்துள்ளது. இண்டர்நெட் இருந்துள்ளது.. தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இருந்துள்ளது. ஐரோப்பியர்களோ அல்லது அமெரிக்கர்களோ இது தங்கள் கண்டுபிடிப்பு என்று கூறலாம். ஆனால் உண்மையில் இது நமது தொழில்நுட்பம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.