பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. மேலும் நீதிமன்றம் அளித்த 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாத கால அவகாசமும் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்தது.
இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9–ந் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் சனிக்கிழமையன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது. ஏனென்றால், காவிரி மேலாண்மை வாரியம் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட ஒன்று கிடையாது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த வழிமுறையையும் நீதிமன்றம் எடுத்து கூறவில்லை. அத்துடன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டதே தவிர அதுதொடர்பான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே உச்ச நீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக உங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

