பாஜக என்பது சிகிச்சை இல்லாத புற்றுநோய்: பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு 

பாஜக என்பது சிகிச்சையே இல்லாத புற்றுநோய் போன்றது என்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக என்பது சிகிச்சை இல்லாத புற்றுநோய்: பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு 

பெங்களூரு: பாஜக என்பது சிகிச்சையே இல்லாத புற்றுநோய் போன்றது என்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியான காங்கிரஸ், பாஜக மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். மத்திய ஆளும்கட்சியான பாஜக கர்நாடகாவில் ஆட்சிக்கு வரக்கூடாது எனக் கூறி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த தேர்தலில் எல்லோரும் ஊழலை பற்றியே பேசுகிறார்கள். ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் பற்றி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் தற்பொழுது மிகப்பெரிய புற்றுநோயாக வகுப்புவாதம் வளர்ந்து வருகிறது. முதலில் அதைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்பின் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கலாம். 

என்னைப் பொறுத்தவரை பாஜக என்பது புற்றுநோய் போன்றது. ஆனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் சளித்தொல்லை போன்றவைதான். சளிக்கு உங்களால் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் புற்றுக் நோய்க்கு சிகிச்சை இன்றி மரணம்தான் ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com