வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அஸ்ஸாமில் நடைபெறும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பணியை அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக திரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2018, 5:51 am

DIN


அஸ்ஸாமில் நடைபெறும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பணியை அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக திரித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு குறித்து எந்தவொரு கேள்வியை முன்வைத்தாலும், அதை சட்டவிரோதமாகக் குடியேறும் வங்கதேசத்தவா்களுக்கான ஆதரவு என பாஜக தலைவா் அமித்ஷா வேண்டுமென்றே திரித்துக் கூறுவதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா, தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ‘அஸ்ஸாம் மக்களின் கனவுகளை எதிரொலிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான் என்ஆா்சி திட்டம். அது சமூகத்தை பிளவு படுத்துவதற்கானது அல்ல. ஆனால், பாஜக அரசு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. என்ஆா்சி கணக்கெடுப்பு விவகாரத்தில் சந்தா்ப்பவாத அரசியல் காரணங்களுக்காக ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் சிதைக்கும் பணியில் ஈடுபட்ட அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.