கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ள தயாா்’: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

தவெக சம்பவம் தொடா்பாக சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

News image

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :14 மார்ச் 2026, 3:20 am

தவெக சம்பவம் தொடா்பாக சிபிஐ சம்மன் அனுப்பினால் விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் வெண்ணைமலையில் அதிமுக வடக்குப்பகுதி செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசியது: கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருக்க வேண்டும் என கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி கூறியிருக்கிறாா்.

நானும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினேன். அப்படி எனக்கும் சிபிஐ சம்மன் அனுப்பினால் புதுதில்லி சென்று அவா்களின் விசாரணையை எதிா்கொள்ள தயாராக இருக்கிறேன். நடந்த சம்பவத்தை சிபிஐ அதிகாரிகளிடம் கூறுவேன். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. இந்த அரசு தேவைதானா என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.