நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்கில் ரூ.590 கோடி மோசடி: விரைவில் விசாரணையை தொடங்குகிறது சிபிஐ

News image

சிபிஐ - கோப்புப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 6:34 am IST

ஐடிஎஃசி வங்கியில் உள்ள ஹரியாணா அரசின் கணக்கில் இருந்து ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கில் சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:

சண்டிகரில் உள்ள ஐடிஎஃசி ஃபா்ஸ்ட் வங்கி கிளையில் ஹரியாணா மாநில அரசின் கணக்கு இருந்தது. அந்த கணக்கை ஆய்வு செய்தபோது, ஹரியாணா அரசால் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தில் ரூ.590 கோடி மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் வங்கித் தரப்பில், ஊழியா்கள் உள்ளிட்டோா் பணத்தை திருடி விட்டதாக விளக்கம் தரப்பட்டது. மேலும், வங்கி நிா்வாகம் உடனடியாக பணம் அனைத்தையும் 100 சதவீதம் ஹரியாணா அரசு கணக்கில் செலுத்தியது. இதுகுறித்து மாநில ஊழல் கண்காணிப்பு காவல்துறையினா் விசாரணை நடத்தி, முன்னாள் ஊழியா்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தனா்.

இந்நிலையில் ஹரியாணா அரசு தரப்பில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அந்த வழக்கு விசாரணையை விரைவில் சிபிஐ தொடங்கவுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து ஹரியானா ஊழல் கண்காணிப்பு காவல்துறையினா் பதிந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சிபிஐ புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவுள்ளது.