பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வட கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் தோல்வி

தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, வட கர்நாடகத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் தோல்வியடைந்தது.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 12:46 am IST


தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, வட கர்நாடகத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் தோல்வியடைந்தது.
வட கர்நாடகம் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவதால் தனி மாநிலமாக்கக் கோரி வெள்ளிக்கிழமை 25-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவுடன் வட கர்நாடகத்தின் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக, போராட்டக் குழுவினர், மடாதிபதிகளைச் சந்தித்து, வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாக முதல்வர் குமாரசாமி உறுதியளித்திருந்தார். ஆனாலும், போராட்டம் நடைபெற்றது. வட கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் பசவராஜ் கரிகாரா போராட்டத்தை உறுதியுடன் தொடர்வதாக அறிவித்திருந்தார்.
இப்போராட்டத்துக்கு தென் கர்நாடகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும் கன்னட அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில், முழு அடைப்பு போராட்டத்துக்கு வட கர்நாடக மக்களிடையே போதுமான ஆதரவு கிடைக்காததால், இப்போராட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. 
இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை: பாகல்கோட், பெலகாவி, விஜயபுரா, தார்வாட், கதக், ஹாவேரி, வடகன்னடம், தென்கன்னடம், பெல்லாரி, பீதர், கலபுர்கி, கொப்பள், ராய்ச்சூரு, யாதகிரி ஆகிய 13 மாவட்டங்களிலும் பேருந்து, ஆட்டோக்கள், வாடகைகார்கள், ரயில்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின. 
பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், உணவகங்கள் திறந்திருந்தன. அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தங்குதடையின்றி இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கிஞ்சிற்றும் பாதிக்கப்படவில்லை. தனிமாநிலக் கோரிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 
நன்றி தெரிவிப்பு: தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்காத வடகர்நாடகமாநில மக்களுக்கு முதல்வர் குமாரசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் மேலும் கூறுகையில், ஒன்றுபட்ட கர்நாடகத்தை வலியுறுத்தும் வகையில் வடகர்நாடக தனிமாநிலக் கோரிக்கையை அப்பகுதி மக்கள் நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. 
வடகர்நாடகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவிருக்கும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை நம்புங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.