தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பிகாரிலிருந்து மிதிலாஞ்சல் மாநிலத்தை பிரிக்க பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் வலியுறுத்தல்

பிகார் மாநிலத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதியை பிரித்து மிதிலாஞ்சல் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என, பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தினார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST


பிகார் மாநிலத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதியை பிரித்து மிதிலாஞ்சல் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என, பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தினார். 
பாரம்பரியம் மிக்க மிதிலாஞ்சல் பிராந்தியம் மிகவும் பின்தங்கியுள்ளதால் அங்கு பொருளாதார நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பேசியதையடுத்து கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தில் பங்கேற்ற பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் பேசுகையில், பிகாரிலிருந்து மிகவும் பின்தங்கிய மிதிலாஞ்சல் பகுதியை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பிகார் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார். 
தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலே பேசுகையில், அரிசி, பருத்தி மற்றும் கோதுமை போன்ற பயிர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கும், மகாராஷ்டிரா அரசு நிர்ணய விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, என்றார்.
பாஜக எம்.பி. மகேஷ்கிரி பேசும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு பேறு கால அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும், என்றார்.
சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட் பேசும் போது, மராத்தா இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.