பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

5 பயங்கரவாதிகள் சுடப்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்துக்கு எதிராக கல்வீச்சு: 20 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் சோஃபியான் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுடப்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2018, 7:13 am

ஜம்மு-காஷ்மீர் சோஃபியான் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுடப்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் அமைந்துள்ள கில்லோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். 

அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் தொடர் தேடுதல் வேட்டையில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதில் ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட பதிலடியில் கல்வீச்சில் ஈடுபட்ட 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.