தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நேபாளத்தில்  25 தமிழர்கள் உட்பட 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு: உதவுமா ராணுவ ஹெலிகாப்டர்?

நேபாள நாட்டில் உள்ள மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 25 தமிழர்கள் உட்பட 200 இந்தியர்கள், நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். 

கோப்புப்படம்

Updated On :

நேபாள நாட்டில் உள்ள மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 25 தமிழர்கள் உட்பட 200 இந்தியர்கள், நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். 

மோசமான வானிலை காரணமாக விமானங்களை இயக்க முடியாத காரணத்தால் யாத்ரீகர்கள் அங்கேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தாற்காலிகமாக தங்கும் இடமும், உணவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் வந்தால் மட்டுமே தங்களை அங்கிருந்து மீட்க முடியும் என்றும் யாத்ரீகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வானிலை காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால், இந்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால் நேபாள ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தங்களை மீட்கலாம் என்று யாத்ரீகர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக, வானிலை வெகு விரைவில் சீராகும் என்றும், அதன் பின்னர் அங்கு சிக்கியுள்ள யாத்ரீகர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நேபாளம் -சீன எல்லையை ஒட்டிய ஹில்சா மற்றும் ஹும்லா மாவட்டத் தலைநகர் சிமிகோட் ஆகிய பகுதிகளில் யாத்ரீகர்கள் தற்போது தங்கியுள்ளனர். சிமிகோட்டில் 150 இந்தியர்களும், ஹில்சாவில் 50 இந்தியர்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹில்சாவில் உள்ள இந்தியர்கள் முதலில் விமானம் மூலமாக சிமிகோட் வந்து, பின்னர் சிமிகோட்டில் இருந்து நேபாள்கஞ்ச் பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 4 மணி நேரம் சாலை வழியாக பயணம் செய்தால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னெள நகரை வந்தடைய முடியும்.

அதே சமயம், சிமிகோட்டில் 500 யாத்ரீகர்கள் வரை தங்கும் வகையில் இடவசதி இருப்பதாகவும், மருத்துவ வசதிகளும் அங்கு உண்டு என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்கள் யாரும் தங்கும் வசதிகள் தொடர்பாக இதுவரை புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தூதரகம் கூறியுள்ளது.

சிமிகோட், ஹில்சா மற்றும் நேபாள்கஞ்ச் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும், சூழ்நிலை மோசமானால், யாத்ரீகர்கள் அனைவரையும் தக்க தருணத்தில் பத்திரமாக மீட்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், இதேபோன்று 1,500 இந்திய யாத்ரீகர்கள், மோசமான வானிலை காரணமாக சிக்கித் தவித்தனர். பின்னர், அவர்கள் விமானம் மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.