கேரள மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அரக்கோணத்தில் இருந்து விமானத்தில் விரைந்தனர்.
தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் வியாழக்கிழமை அதிகாலை அதிகரித்ததைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டன. கேரள மாநில அரசின் தகவல்படி இடுக்கி மாவட்டத்தில் ஆதிலி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 10 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்த மழை மேலும் 2 நாள்களுக்கு நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கேரள மாநில அரசு, அரக்கோணம் அருகே உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை தளத்தில் இருந்து மீட்புப் பணிகளுக்கு ஆட்களை விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.
அதன்பேரில் படையின் உயர்நிலை கமாண்டண்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில், உதவி கமாண்டண்ட் ராஜன்பாலு தலைமையில் தலா 30 பேரை கொண்ட இரு குழுக்கள் பேருந்துகளில் கேரளத்துக்குப் புறப்பட்டன. இவர்கள் புறப்பட்ட நிலையில், உடனடியாக ஆட்கள் தேவை என கேரளத்தில் இருந்து தகவல் வந்ததும், தலா 25 பேரை கொண்ட இரு குழுக்கள் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து உடனடியாக கடற்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 2 மணிநேரத்துக்குப் பிறகு மற்றொரு விமானத்தில் மேலும் தலா 25 பேரை கொண்ட இரு குழுக்கள் கொச்சிக்கு புறப்பட்டன. இக்குழுக்கள் தனித்தனியாக இடுக்கி, பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மீட்புப் படையினர்களுடன் மருத்துவக் குழுவினரும் அவசர கால அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைது

மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல்; அதே இடத்தில் தொடர்வாரா?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


