பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

என்ஆர்சி விவகாரம்: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சிகள் குழு சந்திப்பு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை சந்தித்தனர். 

News image
Updated On :9 ஆகஸ்ட் 2018, 2:46 pm

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை சந்தித்தனர். 

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது. இந்த பதிவேட்டில், ஒரு இந்தியரின் பெயர் கூட விடுபடக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை வைத்தனர். 

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவெ கௌடா தலைமையிலான இந்த எதிர்க்கட்சிகள் குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், தெலுங்கு தேச கட்சியின் ஒய்எஸ் சௌத்ரி, தேசியவாத காங்கிரஸ் சார்பாக சுப்ரியா சுலே, திமுக சார்பாக திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சலீம், ஆம் ஆத்மி சார்பாக சஞ்சய் சிங் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.