இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

என்ஆர்சி விவகாரத்தை அரசியலாக்குகிறது பாஜக

அஸ்ஸாம் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தை பாஜக அரசியலாக்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டி

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

அஸ்ஸாம் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தை பாஜக அரசியலாக்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டி குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் லாபங்களுக்காக என்ஆர்சி பதிவேட்டை காங்கிரஸ் எதிர்ப்பதாக பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
நாட்டில் இருந்து வெளியேற மறுக்கும் வங்கதேச ஊடுருவல்காரர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று பேசிய தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ-வுக்கு உம்மன்சாண்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இந்தியர்களையும், ஊடுருவிய வங்கதேசத்தவர்களையும் தனித்தனியே கண்டறியும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், வங்கதேச ஊடுருவல்காரர்களும், மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கயா அகதிகளும் அவர்களது நாடுகளுக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் அவர்களை துப்பாக்கியால் சுட வேண்டும்'' என்று பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து உம்மன்சாண்டி முகநூலில் பதிவு வெளியிட்டுள்ளார். 
அதில், நாட்டை விட்டு வெளியேற மறுப்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். ஆனால், பாஜக அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலமாக, அவரது கருத்துக்களை பாஜக ஏற்றுக் கொண்டுவிட்டதோ என தோன்றுகிறது.
என்ஆர்சி பட்டியலை காங்கிரஸ் எதிர்ப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால், கடந்த 2009-இல் ரூ.489 கோடியை ஒதுக்கீடு செய்து, அந்த கணக்கெடுப்பை தொடங்கி வைத்ததே காங்கிரஸ்தான். 2014-ஆண்டில் 80 சதவீத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்திருந்தன.
பட்டியலில் விடுபட்ட உண்மையான இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என பாஜக கூறுகிறது. ஆனால், இதுவரையில் மாபெரும் நிர்வாக நடவடிக்கைகளை பாஜக கையாண்ட விதம் யாவும் தவறாகவே முடிந்துள்ளன. முறையான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் யாவும் அழிவுக்கு வழிவகுத்தன. தற்போதைய சூழ்நிலையில், பாஜக நிர்வாகத் திறன் குறித்தும், என்ஆர்சி பட்டியலில் விடுபட்ட லட்கணக்கான மக்களுக்கு நீதி கிடைப்பது குறித்தும் மிகுந்த கவலை கொள்ள வேண்டியிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.