பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹைதராபாத்தை ஸ்தம்பித்த 'இகியா' விற்பனையகத்தின் விடியோ

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கான இகியா விற்பனையகம் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை முதன்முறையாக திறக்கப்பட்டது. 

News image
Updated On :11 ஆகஸ்ட் 2018, 9:36 am

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கான இகியா விற்பனையகம் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை முதன்முறையாக திறக்கப்பட்டது. இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறையாக இகியா விற்பனையகம் தனது முதல் கிளையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 4 லட்சம் சதுர அடியில் மிகப் பிரமாண்டமாக ஹைதராபாத்தின் பிரதான பகுதியான ஹைடெக் சிட்டியில் இகியா விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இங்கு குவிந்தனர்.

இதனால் ஹைடெக் சிட்டி முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகள் முழுவதும் ஸ்தம்பித்தது. மேலும் இகியா கட்டடத்திலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

முதல் நாளிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் இவ்வளவு வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர். இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலை சீர்செய்யவதற்குள் பணியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதாக இந்த கிளையின் நிர்வாக இயக்குநர் ஜான் ஆச்சிலியா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.