
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாடு தன் சிறந்த மகனை இழந்துவிட்டது. பல கோடி பேரால் நேசிக்கப்பட்ட வாஜ்பாய் அவர்கள் காலமானார். நாம் அனைவரும் அவரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கூறுகையில்,
பாரத ரத்னா திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தலைசிறந்த பேச்சாளர், கவிஞர், உண்மையான பொதுநலச் சேவகர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், தலைசிறந்த பிரதமர் என்று தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







