கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கேரளாவில் பாலக்காடு அருகே நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

கேரளாவில் பாலக்காடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கேரளாவில் பாலக்காடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். 

கடந்த 8-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கிய மழையானது, தொடர்ந்து தீவிரம் குறையாமல் பெய்து வருகிறது. இதனால் மாநிலம் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருகிறது.

மாநிலமே உருகுலைந்து காணப்படுகிறது. அணைகள் நிறைந்து வழிவதால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையால் பாலக்காடு நென்மாறை போத்துண்டி அருகே நிலச் சரிவு ஏற்பட்டது.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் மண்ணில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதையடுத்து மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.