டிஜிபி ஆய்வுக்கூட்டத்திற்குக் கூட  வராதவர் பொன்.மாணிக்கவேல்: சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகவல்

காவல்துறைத் தலைவரான டிஜிபி நடத்தும் ஆய்வுக்கூட்டத்திற்குக் கூட  வராதவர் பொன்.மாணிக்கவேல் என்று சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
pon_manickavel
pon_manickavel
Published on
Updated on
1 min read

சென்னை: காவல்துறைத் தலைவரான டிஜிபி நடத்தும் ஆய்வுக்கூட்டத்திற்குக் கூட  வராதவர் பொன்.மாணிக்கவேல் என்று சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிலைகடத்தல்கள் தொடர்பான வழக்குக்களை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவானது வியாழனன்று விசாரணைக்கு வந்த பொழுது, தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளர் முருகன் சாபில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் கூறப்பட்டிருந்ததாவது:

சிலைகடத்தல்கள் தொடர்பான வழக்குக்களை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் உள்நோக்கம் எதுவுமில்லை.

விசாரணை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்பதற்காகவே வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது.

மொத்தம் 113 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அவற்றில் எந்த வழக்குங்களை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து முடிவு செய்யும்.

சிலை கடத்தல் வழக்கின் போக்கினை திசை திருப்புவதோ, குற்றம் சாட்டப்பட்டவர்களின் அழுத்தம் காரணமாகவோ வழக்குகள் மாறப்படவில்லை.

அரசின் இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது. இந்த முடிவுக்கு உள்நோக்கம் கற்பிப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது. 

சிலைகடத்தல்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல், அதுகுறித்து எந்த அறிக்கையும் அரசுக்கு வழங்கவில்லை.

அத்துடன் காவல்துறைத் தலைவரான டிஜிபி நடத்தும் ஆய்வுக்கூட்டத்திற்குக் கூட  வராதவர் பொன்.மாணிக்கவேல்      

இந்த வழக்கில் நிறைய புதியவர்கள் மற்றும் வெளிநாட்டினைச் சேர்ந்தவர்கக்ள் இருப்பதாலதான் வழக்குகள் சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com