வாஜ்பாய் உடல்நிலை: குடியரசு துணைத் தலைவர், அமித் ஷா, ராகுல் காந்தி விசாரிப்பு
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று காலை சென்று, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று காலை சென்று, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் (93) கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர், சிறுநீரக பாதை தொற்று, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது.
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில், துரதிருஷ்டவசமாக, கடந்த 24 மணி நேரமாகவே, வாஜ்பாய் உடல்நிலை மோசமாகி வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு 7.15 மணியளவில் நேரில் வந்தார். சுமார் 50 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த மோடி, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று காலை சென்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து இன்று கேட்டறிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





