கேரளாவில் கன மழையின் காரணமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்வு
கேரளாவில் கன மழையின் காரணமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


திருவனந்தபுரம்: கேரளாவில் கன மழையின் காரணமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேரள மாநில முதல்வர் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தை கேரளா எதிர்கொண்டுள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 1500 -க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 223139 பேர் தங்க வைக்கப்பட்டுளள்னர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை மறு உருவாக்கம் செய்ய உங்களது உதவிகள் துணை புரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...