பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்: குற்றவாளிகளைக் கடித்துக் குதறியது

தனது 14 வயது எஜமானியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர்களை நாய் கடித்துக் குதறிய சம்பவம் செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது.
பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்: குற்றவாளிகளைக் கடித்துக் குதறியது
Updated on
1 min read

தனது 14 வயது எஜமானியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர்களை நாய் கடித்துக் குதறிய சம்பவம் செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்தச் சிறுமியின் வளர்ப்பு நாய் அவர்கள் இருவரையும் கடித்துக் குதறியது. இதில் சுதாரித்துக்கொண்ட அச்சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டி உடனடியாக கூச்சலிட்டார்.  

அப்போது அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து அந்த 14 வயது சிறுமியை மீட்டனர். மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற அந்த 2 பேரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை அப்பகுதி போலீஸ் அதிகாரி விபின் தம்ராகர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் 2-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடந்த ஜூன் 26-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 குற்றவாளிகளுக்கும் செவ்வாய்கிழமை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com