ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மும்பையில் கிறிஸ்டல் டவர் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

மும்பையின் தாதர் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2018, 6:56 am


மும்பை: மும்பையின் தாதர் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.

16 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

17 மாடிகளைக் கொண்ட கிறிஸ்டல் டவர் கட்டடத்தின் 12வது மாடியில் தீப்பிடித்ததாக இன்று காலை 8.30 மணியளவில் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் வந்தது. 12வது மாடியில் பிடித்த தீ மளமளவென அடுத்த மாடிகளுக்கும் பரவியது. குடியிருப்புகளில் இருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள், கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியிலும், தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும், மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.