மும்பை: மும்பையின் தாதர் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.
16 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
17 மாடிகளைக் கொண்ட கிறிஸ்டல் டவர் கட்டடத்தின் 12வது மாடியில் தீப்பிடித்ததாக இன்று காலை 8.30 மணியளவில் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் வந்தது. 12வது மாடியில் பிடித்த தீ மளமளவென அடுத்த மாடிகளுக்கும் பரவியது. குடியிருப்புகளில் இருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள், கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியிலும், தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும், மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


