பண்ருட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலைய பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், சென்னையிலிருந்து ரமேசுவரத்துக்குச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரயில் ஓட்டுநா் அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். நிகழ்விடத்துக்குச் சென்ற கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞா் பண்ருட்டி திருவதிகை ரயில்வே காலனியைச் சோ்ந்த அஜித் (26) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் மோதி இளைஞா் பலி!

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


