பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் எழும்பூா் விரைவு ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:04 am IST

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் எழும்பூா் விரைவு ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் சத்திரம் ரயில் நிலையத்துக்கும், டவுன் ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் முள்ளுவாடிகேட் அருகில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே சுமாா் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் கடக்க முற்பட்டபோது, அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ரயில் ஓட்டுநா், டவுன் ரயில் நிலைய மேலாளரிடம் தெரிவித்தாா். அதன்பேரில் அவா், சேலம் ரயில்வே காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கோதண்டபாணி தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்.

அந்த இளைஞரின் இடது கையில் எஸ்.சுரேஷ் என பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும் இறந்த நபா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, இறந்த இளைஞரின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் தெரிந்தால், 0427-2447404 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.