எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் லாலு சரண்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நீதிமன்றத்தில் வியாழக்கிமை சரணடைந்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ராஞ்சி: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நீதிமன்றத்தில் வியாழக்கிமை சரணடைந்தார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலுவின் ஜாமீன் காலம் முடிவடைந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றங்களில் அவர் ஆகஸ்டு 30-ஆம் தேதிக்குள் சரணடையுமாறு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், பிகார் மாநிலம், பாட்னாவில் இருந்து ராஞ்சி நகருக்கு அவர் புதன்கிழமை வந்தடைந்தார்.
லாலு பிரசாத் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக
நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத்திடம் அவரது வழக்குரைஞர் தெரிவித்தார். லாலுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை தொடர்புகொண்டு ஆலோசிக்குமாறு பிர்ஸா முண்டா சிறைச்சாலை மருத்துவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் உமேஷ் பிரசாத்திடம் லாலு பிரசாத் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும் ஒரு சிபிஐ நீதிமன்றத்திலும் அவர் வியாழக்கிழமை ஆஜராகினார்.
பின்னர், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அந்நகரில் உள்ள மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
பிகார் முதல்வராக லாலு பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஒரு சில வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், மீண்டும் ஜாமீன் நீட்டிக்கப்பட்டு அந்தக் காலக்கெடுவும் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.