மும்பை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிட்டு வாக்குச் சீட்டு முறையைப் பின்பற்றும் வரை தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவர்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ராஜ் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு தேர்தல்களில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்தும் தோல்விகளைச் சந்தித்துள்ளனர். சிலர் மிக எளிதாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் பல மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கைவிட்டு, வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியா, நைஜீரியா, வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று எழுந்துள்ள புகார்கள் எளிதில் புறம்தள்ளிவிட முடியாது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்குரிமை, எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்காத வகையில் இருக்க வேண்டும். எனவே, மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். அல்லது சந்தேகம் எழுந்தால் வாக்கு ஒப்புகைச் சீட்டை என்னும் முறையைக் கொண்டு வர வேண்டும். இது நடக்காத வரையில் நாம் அனைவரும் இணைந்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13 நாள்களாகியும் பதிலளிக்காத மோடி, அமித் ஷா: ராகுல் காந்தி

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

புதிதாக 15 நீதிபதிகள்: சென்னை உயா்நீதிமன்த்தில் பதவியேற்பு

BJP - DMK நட்புறவா? அரசியலில் நண்பன், எதிரி கிடையாது! கனிமொழி சோமு
விடியோக்கள்

”திட்டங்களின் பெயரை விட முக்கியம்...” அமைச்சர் அருண்ராஜ் | TVK



