
புது தில்லி: எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது சாதி குறிப்பிடப்படாத பிற மாநிலங்களில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு கோருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு ஒன்று வியாழன் அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். பானுமதி, எம். சந்தானகவுடர் மற்றும் எஸ்.ஏ. நசீர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒரு மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை அல்லது கல்வி நோக்கத்திற்காக வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த பின் அங்கேயும் அவர் தன்னை தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என கூறிட முடியாது என தெரிவித்து உள்ளது.
எனவே இந்த தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது மாநிலம் தவிர்த்த பிற மாநிலங்களில் அதே சாதியாக குறிப்பிடப்படாத நிலையில், அவர் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பலன்களை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.