பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிர்வாகக்குழு இயக்குநராக சந்தா கோச்சார் மீண்டும் நியமனம்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநராக சந்தா கோச்சாரை மீண்டும் நியமிப்பதற்கு ஐசிஐசிஐ வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


புது தில்லி: ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநராக சந்தா கோச்சாரை மீண்டும் நியமிப்பதற்கு ஐசிஐசிஐ வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
வீடியோகான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் அளிக்க உதவி செய்து, அதற்கு பிரதிபலனாக ஆதாயம் பெற்றதாக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயலதிகாரியுமான சந்தா கோச்சார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த விசாரணை நடைபெறுவதால், சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இதனிடையே, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநராக மீண்டும் தேர்வாக விரும்புவதாக சந்தா கோச்சார் தெரிவித்தார். இந்நிலையில், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் 80 சதவீத பங்குகளை கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கி, விதிப்படி, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநராக சந்தா கோச்சாரை மீண்டும் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றியது. விசாரணை நிலுவையில் இருப்பினும், நிர்வாக குழு இயக்குநர் பதவி காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக சந்தா கோச்சாரை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக ஐசிஐசிஐ வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஐசிஐசிஐ வங்கியுடனான சந்தா கோச்சாரின் பணி ஒப்பந்தம், வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.