புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது: பாஜக

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2018, 7:38 am

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேரு குடும்பம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,

கடந்த காலங்களில் நேரு குடும்பம் தான் மக்களின் பணத்தை அதிகம் கொள்ளையடித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கொள்ளையடிக்கப்பட்ட அந்த பணம் எதற்கு உதவாமல் போனது. எனவே இதனால் நேரு குடும்பம் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் இதனை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதுதொடர்பாக ராகுலின் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் அரசியலில் அவர் தீவிரமாக இல்லை என்பதை காட்டியுள்ளது. மேலும் விமர்சிக்க எந்த காரணமும் இல்லாத காரணத்தால் தான், கடந்த உத்தர பிரதேச தேர்தல் முதல் தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குற்றம்சாட்டி வருகிறார். 

ஜனநாயகத்தின் சிறந்த நீதிபதிகளாக மக்கள் தான் உள்ளனர். எனவே தான் அவர்கள் காங்கிரஸ் கட்சியை மட்டும் நிராகரிக்கவில்லை. அதன் தலைவர் ராகுலையும் சேர்த்து நிராகரித்துவிட்டனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.