ரயில்வே கேன்டீன் ஒப்பந்த ஊழல் வழக்கு: லாலுவுக்கு சம்மன், மனைவி மற்றும் மகனுக்கு பிணை

ரயில்வே கேன்டீன் ஒப்பந்த முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு சம்மன் வழங்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ரயில்வே கேன்டீன் ஒப்பந்த ஊழல் வழக்கு: லாலுவுக்கு சம்மன், மனைவி மற்றும் மகனுக்கு பிணை
Updated on
1 min read

ரயில்வே கேன்டீன் ஒப்பந்த முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு சம்மன் வழங்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ராஞ்சி மற்றும் பூரி ஆகிய நகரங்களில் ரயில்வே கேன்டீன் பராமரிப்பு பணிகள் தொடர்பாக தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்த முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் மகனும் பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் ஆதரவாளர்களான பி.சி.குப்தா மற்றும் அவரது மனைவி சர்ளா குப்தா, லாரா புராஜெக்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட 10 பேர் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தில்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி உள்ளிட்ட அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது. இருப்பினும் இவ்வழக்கு தொடர்பாக அக்டோபர் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு லாலு பிரசாத் யாதவுக்கு சம்மன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

முன்னதாக, மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com