உலகிலேயே அதிக உயிர்பலிக்குக் காரணமான பேரிடரில் கேரள வெள்ளத்துக்கு முதலிடம்

2018ம் ஆண்டு உலகிலேயே மிக மோசமான பேரிடராக கேரள வெள்ளத்தை சர்வதேச வானிலை மையம் அறிவித்துள்ளது.
உலகிலேயே அதிக உயிர்பலிக்குக் காரணமான பேரிடரில் கேரள வெள்ளத்துக்கு முதலிடம்


2018ம் ஆண்டு உலகிலேயே மிக மோசமான பேரிடராக கேரள வெள்ளத்தை சர்வதேச வானிலை மையம் அறிவித்துள்ளது.

1920ம் ஆண்டுக்குப் பிறகு  கேரளாவில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் காரணமாக 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 

இதற்கடுத்தபடியாக அதிக உயிர்பலியை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களாக ஜப்பான், கொரியா, நைஜீரியா நாடுகளில் ஏற்பட்ட வெள்ளமும், பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட கொடூர வெயிலும் இடம்பெற்றுள்ளன.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் உலக அளவில் 4வது இடத்தில் கேரள வெள்ளம் இடம்பெற்றுள்ளது. 

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநிலமெங்கும் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பாக கருதப்பட்டது.

குறிப்பாக, வெள்ளத்தால் 14 மாவட்டங்களில் 54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 443 பேர் பலியானதாகவும், அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com