கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவிற்கு ஆதரவு: பாஜக அறிவிப்பு 

தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. 

News image
Updated On :9 டிசம்பர் 2018, 9:27 am

DIN

ஹைதராபாத்: தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. 

ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத்த தேர்தல் சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டிஆர்எஸ்) மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அம்மாநில பாரதிய ஜனதா தலைவர்  கே.லட்சுமண் கூறியதாவது:-

தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம். காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகிய காட்சிகள்தான் எங்களுக்கு எதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாகும். எனவே அவர்களை ஆட்சியமைக்க விடமாட்டோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.