மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கி.மீ தூரம் பறந்து சென்று தாக்கும் அக்னி ஏவுகணை வெற்றிகர சோதனை 

அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

News image
Updated On :10 டிசம்பர் 2018, 1:30 pm

புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்த,  17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் குறிப்பிட்ட இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள், சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  

ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில்  இருந்து திங்கள் பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.