விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு சந்திப்பு 

தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :11 டிசம்பர் 2018, 10:46 am

புது தில்லி: தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் செவ்வாய் காலை 8 மணியில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளன. 

அதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெற்றி பெற்ற இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கவும், மத்திய பிரதேசத்தில் நீடிக்கும் இழுபறி நிலைக்கு சுமூக தீர்வு காணவும் ஆலோசனை நடக்கும் என்று தெரிகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.