நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி 

இந்தியாவையே உலுக்கிய நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி 
Published on
Updated on
1 min read

புது தில்லி: இந்தியாவையே உலுக்கிய நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் முகேஷ் (31), பவன் குப்தா (24), வினய் ஷர்மா (25), அக்ஷய் குமார் சிங் (33) ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை தில்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.

இதை எதிர்த்து, முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகியோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. எனினும், 4ஆவது நபரான அக்ஷய் குமார் சிங், சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

அதேசமயம் நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றக்கோரி வழக்குரைஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரையிலான நடவடிக்கைகள் 8 மாதங்களுக்குள் முடிய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அப்படி நடக்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டே நான்கரை மாதங்கள் ஆகின்றன. அதன்பிறகும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை அதிகரிக்க செய்துவிடும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிர்பயா வழக்கு: குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனுவானது நீதிபதிகள் மதன் லோகுர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'என்ன மாதிரியான வேண்டுகோளை இந்நீதிமன்றத்தின் முன் வைக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com