
பிரதமர் மோடி வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.21 மற்றும் 22ஆம் தேதி) குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
டிச.20 ஆம் தேதி அகில இந்திய அளவில் காவல்துறைத் தலைவர்கள் (டிஜிபி) மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட வல்லபபாய்படேல் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற உள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழா டிச.20ஆம் தேதி நடைபெறும். முதல்நாள் நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
21ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இம்மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைப்பகுதிகளில் உள்ள மாநிலங்களில் நடைபெற்று வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களை கட்டுப்படுத்தவும், தீவிரவாதத்தில் ஈடுபடும் இளைஞர்களை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், மத, இன மோதல்களை தடுப்பது, ஜாதிப் பிரச்னையால் பதற்றம் நிறைந்த பகுதிகளை அடையாளம் கண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்படும் ஆபாசப்படங்களை தடுப்பது குறித்தும் மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
காந்தி நகர் அடலஜ் கிராமத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பாஜக மகளிர் அணி கருத்தரங்கின் கடைசி தினமான டிச.22 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றி கருத்தரங்கை நிறைவு செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







