ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து காங்கிரஸ் அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றின. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைத்ததையடுத்து, காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு 73 இடங்கள்தான் கிடைத்தன.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் அரங்கில் புதிய முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் (67), துணை முதல்வராக சச்சின் பைலட் (41) பதவியேற்றனர். இருவருக்கும் ஆளுநர் கல்யாண் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தனிநபர் விவசாயியின் ரூ.2 லட்சம் வரையிலான ரூ.18,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வரின் தனித்தீர்மானம்; உதயநிதியின் முழு உரை! | DMK | TVK | CM Vijay

தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வேண்டும்! பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK

மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர விடுதி கட்டணத்தைவிட கூடுதலாக இருக்கக் கூடாது! பரிந்துரை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! இலங்கை அணி அறிவிப்பு!
விடியோக்கள்

தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வேண்டும்! பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK



