சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

இந்த ஆண்டின் ஏழாவது ராக்கெட் திட்டம்

ஜிசாட்-7ஏ செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் திட்டம் இந்த ஆண்டு இஸ்ரோ சார்பில்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


ஜிசாட்-7ஏ செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் திட்டம் இந்த ஆண்டு இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் ஏவு தளங்களிலிருந்து அனுப்பப்படும் 7 ஆவது ராக்கெட் திட்டமாகும். 
2018 ஜனவரி 12 ஆம் தேதியன்று பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் மூலம் கார்டோசாட்-2 செயற்கைக்கோள் திட்டமும், மார்ச் 29 அன்று ஜி.எஸ்.எல்.வி.-எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் திட்டமும், ஏப்ரல் 12 அன்று பி.எஸ்.எல்.வி.-சி4 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-11 செயற்கைக்கோள் திட்டமும், செப்டம்பர் 16 அன்று பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் திட்டமும், நவம்பர் 14 அன்று ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 செயற்கைக்கோள் திட்டமும், நவம்பர் 29 ஆம் தேதியன்று பி.எஸ்.எல்.வி.-சி43 ராக்கெட் மூலம் ஹைசிஸ் செயற்கைக்கோள் திட்டமும் இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.
இப்போது இந்த ஆண்டின் ஏழாவது மற்றும் கடைசி ராக்கெட் திட்டமாக ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
13 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்: அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைப் பொருத்தவரை இதுவரை 12 ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டன. இதில் 7 வெற்றிபெற்றன. 3 ராக்கெட்டுகள் தோல்வியிலும், இரண்டு பகுதி தோல்வியிலும் முடிந்தன. இப்போது அனுப்பப்பட்டது 13 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 7 ஆவது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.