கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

விவசாய கடன் தள்ளுபடி மட்டுமே பிரச்னைக்குத் தீர்வல்ல: நீதி ஆயோக்

விவசாயத்துக்கு அளிக்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வது மட்டும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வாகாது என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


விவசாயத்துக்கு அளிக்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வது மட்டும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வாகாது என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் பிரதமர் நரேந்திர மோடியை தூங்கவிட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், நீதி ஆயோக் இவ்வாறு கூறியுள்ளது.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், நீதி ஆயோக் உறுப்பினரும், வேளாண்மை கொள்கை நிபுணருமான ரமேஷ் சந்த் ஆகியோர் கூறியதாவது:
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமே அத்துறை சந்தித்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக அமையாது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதால் விவசாயிகளில் சிறு பகுதியினருக்கு மட்டுமே பயன் கிடைக்கும். பின்தங்கிய மாநிலங்களில் 10 முதல் 15 சதவீத விவசாயிகளே முறைப்படி வங்கிகளில் விவசாயத்துக்காக கடன் பெற்றிருப்பார்கள். இப்போதும் கூட பல மாநிலங்களில் 25 சதவீதத்துக்கும் குறைவான விவசாயிகளே வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். எனவே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்காது.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூட, விவசாயக் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்காது என்றே கூறப்பட்டுள்ளது. வேளாண் துறையை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளை அத்துறை அமைச்சகத்துக்கு நாங்கள் அளித்துள்ளோம். விவசாயத் துறையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பயிர்க் காப்பீடு, விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது, ஏற்றுமதியை அதிகரிப்பது, சேமிப்புக் கிடங்குகளை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு எந்தப் பயிரை விளைவிப்பது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்டவை இதில் அடங்கும். நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பொருத்தவரையில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. முன்பு இருந்ததைவிட நமது நாட்டில் இளைஞர்கள் இப்போது துடிப்புடன் செயல்படுகிறார்கள். இளைஞர்கள் தொழில் தொடங்குவது வேகமாக அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைத்தும் இளைஞர்களின் யோசனையிலேயே உருவாகின்றன என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.